புதிய தலைமுறைக்கு பழைய பாடத்திட்டம்: மாற்றம் தேவை!

கல்வி சீர்திருத்தம்   திறன் வளர்ப்பு   பெண் குழந்தைகள்   உயிர் பாதுகாப்பு

 உலகின் பல நாடுகள் கல்வியை வெறும் "படிப்பு மற்றும் மதிப்பெண்" என்ற கோணத்தில் பார்க்காமல், குழந்தைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்தும் "Survival Expert" அனுபவமாக மாற்றியிருக்கின்றன. மதிப்பெண் அதிகமாக வாங்கிய மாணவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது உண்மையல்ல. வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை கற்றுக்கொண்டவர்தான் வெற்றியடைவார்!

Education


இன்றைய பள்ளிகளில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டது. ஆனால் உலகம் வேகமாக மாறிவிட்டது — தொழில்நுட்பம், சமூகம், மனித தேவைகள் அனைத்தும் மாறிவிட்டன. எனினும் நம் பள்ளிகளில் இன்னும் "படி, மனப்பாடம் செய், தேர்வு எழுது, மதிப்பெண் வாங்கு" என்ற ஒரே வட்டத்தில்தான் கல்வி சுற்றிக்கொண்டிருக்கிறது.

மதிப்பெண் மட்டுமே கல்வியா?

இன்றும் பல பள்ளிகளில் குழந்தைகள் தேர்வு மதிப்பெண்ணுக்காக மட்டுமே படிக்கிறார்கள். அவர்களுக்கு கணக்கு, அறிவியல், தமிழ் எல்லாம் தெரியும் — ஆனால் நெருப்பு விபத்தில் என்ன செய்வது என்று தெரியாது; யாரோடேனும் தனிமையில் சிக்கினால் எப்படி தப்பிக்கணும் என்று தெரியாது; கடலில் விழுந்தால் மூழ்காமல் இருக்க தெரியாது. இது மிகவும் கவலைப்படக்கூடிய நிலை.

PT பீரியட் — வெறும் விளையாட்டு?

பள்ளிகளில் PT (Physical Training) பீரியட் உள்ளது — ஆனால் அது பெரும்பாலும் வெறும் விளையாட்டுக்கோ அல்லது வெறுமனே நிற்பதற்கோ பயன்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒரு திறனோடு(inborn talent) பிறக்கிறது. யாரோ ஓடுவதில் வேகமானவர்கள், யாரோ பாடுவதில் கைதேர்ந்தவர்கள், யாரோ கால்பந்தில் இயற்கையாகவே வல்லவர்கள். ஆனால் இன்றைய பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியான பாடப்புத்தகத்தை பார்த்து, ஒரே மாதிரியான தேர்வு எழுதி, ஒரே மாதிரியான மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது தவறு — இது ஒரு பெரிய தவறு!

உள்ளார்ந்த திறன் கண்டறிதல் என்பது வெறும் sports day-ல் ஒரு race நடத்துவது அல்ல. ஆசிரியர்கள் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் — யார் விளையாட்டு மைதானத்தில் தன்னிச்சையாக திறமை காட்டுகிறார்கள், யார் ஓவியம் வரையும்போது மற்றவர்களை மறக்கிறார்கள், யார் இசையை உள்ளுணர்வால் பின்பற்றுகிறார்கள் — இவற்றை கண்டுபிடிப்பதுதான் உண்மையான ஆசிரியர் கடமை.

ஒரு பெண் குழந்தை மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டால், அவள் தன்னை காத்துக்கொள்வாள் மட்டுமல்ல — அவளுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வரும். அவள் வலிமையான பெண்ணாக வளருவாள்! பெண் குழந்தையை பாதுகாப்பில் வளர்க்க வேண்டாம்,தைரியத்தில் வளர்க்க வேண்டும். பாதுகாப்பு தேவைப்படும் பெண்ணாக அல்ல, "சிங்கப்பெண்ணாக” வளர்க்கப்பட வேண்டும்.

 ஜப்பான் சிறிய சாலை மாதிரி (Traffic Park) அமைத்து, பாலர் பள்ளி குழந்தைகளுக்கே போக்குவரத்து விதிகளை விளையாட்டாக கற்றுத்தரப்படுகிறது — குழந்தைகளுக்கு driver's license கூட வழங்குகிறார்கள். O-Soji என்ற தினசரி சுத்தம் செய்யும் பழக்கத்தின் மூலம் மாணவர்கள் வகுப்பறை, நடைபாதை எல்லாவற்றையும் தாங்களே சுத்தம் செய்கிறார்கள் — இது ஒழுக்கம், பொறுப்புணர்வு, குழுவேலை கற்றுத்தரும் நேரம். நீச்சல் கட்டாயப் பாடமாக உள்ளது — ஜப்பான் தீவு நாடு என்பதால் இது உயிர் காக்கும் தேசிய முன்னுரிமை.

பின்லாந்து 7 வயது வரை பள்ளி இல்லை, high school வரை standardized tests இல்லை. 16 வயது வரை எந்த மத்திய தேர்வும் நடத்தப்படுவதில்லை. குழந்தைகள் குளிர்காலத்திலும் கூட வெளியே அதிக நேரம் விளையாடுகிறார்கள், homework மிகவும் குறைவு.

டென்மார்க் காட்டு பாலர் பள்ளிகளில் குழந்தைகள் சுற்றுச்சூழலையே தங்கள் கற்றலின் ஆரம்ப புள்ளியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்கா உலகின் வல்லரசாக இருப்பதற்கு காரணம் — அவர்கள் மாணவர்களை textbook robot-ஆக வளர்க்கவில்லை. Show & Tell-ல் தைரியத்தையும், Science Fair-ல் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும், Debate-ல் வாதிடும் திறனையும், Community Service-ல் சமூக உணர்வையும் உருவாக்கியுள்ளது.

இந்த உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கேற்ற கல்வி முறையை நாம் இன்னும் முழுமையாக உருவாக்கவில்லை. குழந்தைகளுக்கு புத்தக அறிவு மட்டும் போதாது; வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம், பிரச்சனைகளை சமாளிக்கும் திறன், சமூக பொறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் உயிர் பாதுகாப்பு திறன்களும் equally முக்கியம்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமையுடன் பிறக்கிறது. அந்த திறமையை கண்டறிந்து வளர்ப்பதே உண்மையான கல்வி. மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் அல்ல, மனிதநேயமும் திறமையும் கொண்ட அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை அச்சத்தில் அல்ல, தைரியத்தில் வளர்க்க வேண்டும். மாணவர்களை மனப்பாட இயந்திரங்களாக அல்ல, சிந்திக்கும் மனிதர்களாக உருவாக்க வேண்டும். கல்வி என்பது தேர்வுக்காக அல்ல — வாழ்க்கைக்காக!

இப்போது கல்வி முறை மாற வேண்டிய நேரம் அல்ல

மாற்றியே ஆக வேண்டிய காலம்!


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்