ஐபிஎல்: தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே சிஇஓ வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை: 10 அணிகள் பங்கேற்ற 18வது ஐபிஎல் (IPL)கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு(2025) நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

அடுத்த 19வது சீசன் அடுத்த வருடம் (2026)நடைபெற உள்ளது. அதற்கு முன் வீரர்களுக்கான “மினி ஏலம்” இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றவிருக்கும் வீரர்களின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த சீசனில் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இது சென்னை அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.

தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால், மீண்டும் மகேந்திரசிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தோனியின் தலைமையிலும் சென்னை அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலேயே முடிந்தது.

இதனிடையே, 44 வயதான மகேந்திரசிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதனிடம் குழந்தைகள் நேரடியாக தோனி பற்றிக் கேட்டனர்.சமீபத்திய நிகழ்ச்சியில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனிடம் குழந்தைகள் தோனி குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் “தோனி ஓய்வு பெறப்போவதில்லை” என்று தெளிவாக பதிலளித்தார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்