இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான சொஹ்ரான் மம்தானி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோவை தோற்கடித்து, நியூயோர்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயரும், நூற்றாண்டுக்கு பிறகு பதவி ஏற்ற இளைய மேயரும் ஆனார். தனது வெற்றி உரையில், புதிய மேயர் டொனால்ட் டிரம்ப் வரி விதிகளில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, தன் நியாயமான வரி பங்கைக் கூட தவிர்த்ததாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய
நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
தற்போது மம்தானியின் வரலாற்று வெற்றி, அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் புஸ்வாணம் ஆனது.
.png)
0 கருத்துகள்