பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025: இந்தியா பட்டத்தை கைப்பற்றிய வெற்றி தருணம்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.


மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

ஷாஃபலி அதிரடி: 

இந்திய அணிக்கு  ஷாபாலி வர்மா மற்றும், ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கம் தந்தனர், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள சேர்த்தனர். மந்தனா 45 ரன்களுக்கும், ஜெமிமா 24 ரன்னுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து தனது சதத்தை தவறவிட்டார்.
இதற்கு முன் 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

 ரிச்சா-தீப்தி அசத்தல்:

 7வது வீரராக ரிச்சா கோஷ் தீப்தி சர்மாவுடன் இணைந்து தனது அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணியை நல்ல ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். ஒரு கட்டத்தில் 320 ரன்களை இந்திய நெருங்கும், என்று எதிர்ப்பார்த்த நிலையில்  49வது ஓவரில் 34 ரன்களுக்கு ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். மறுப்பக்கம் தீப்தி சர்மா தனது அரை சதத்தை கடந்தாலும் அவரால் இறுதி ஓவர்களில் அதிரடி காட்ட முடியவில்லை. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்யிணத்தது.

இந்தியா வெற்றி:

299 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அடுத்தாக வந்த அன்னேக் போஷ் டக் அவுட்டாக போட்டி இந்திய பக்கம் திரும்பியது.
"நான் முன்பே சொன்னேன், கடவுள் என்னை இங்கே ஒரு நல்ல காரியத்தைச் செய்ய அனுப்பியுள்ளார், அது இன்று நடந்துள்ளது. நாங்கள் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் உலகக்கோப்பை ஆட்டநாயகி ஷஃபாலி வர்மா நெகிழ்ச்சி

ஐசிசியை மிஞ்சிய பிசிசிஐயின் பரிசு மழை:

இந்த உலகக்கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு, ஐசிசி சார்பில் 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 39.78 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்நிலையில், பிசிசிஐ, ஐசிசி வழங்கும் தொகையை விட கூடுதலாக, 51 கோடி ரூபாயை இந்திய அணிக்கு ஊக்கப்பரிசாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அளித்த பேட்டியில், "உலகக்கோப்பை போன்ற ஒரு கடினமான தொடரை வென்ற இந்திய வீராங்கனைகளைப் பாராட்டும் விதமாக இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், ஐசிசியின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் முயற்சியால் மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை சுமார் 300 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதற்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
 

 

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்